
சிறிது நேரத்துக்கு முன்பு அமெரிக்க இராணுவம் ஈரானில் பாரிய போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்
அதேநேரம், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா வான் மற்றும் கடல் வழியாக ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ‘ரொய்ட்டர்ஸ்’ (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிலடியானது மிகவும் கடுமையானதாக (Crushing response) இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.





