இந்தியா

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

புது டில்லியில் இடம்பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்துள்ளார்.

 

தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர், சுந்தர் பிச்சையைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

 

செயற்கை நுண்ணறிவில் இந்தியா செய்து வரும் பணிகள் மற்றும் இந்தத் துறையில் நமது திறமையான மாணவர்கள், நிபுணர்களுடன் கூகிள் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்துப் பேசியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்று புதன் கிழமை டில்லி வந்த சுந்தர் பிச்சை, இந்தியாவுக்குத் திரும்பியது “மகிழ்ச்சி” தருணம் என தெரிவித்துள்ளார்.

 

டில்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 

ஆறு நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவுபெறுகின்றது. இதில் உலக நாடுகளின் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறமை குறிப்பிடத்தகது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button