
இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யும் இறைச்சி மற்றும் மாடு, ஆடு, கோழி, பன்றிகளின் இறக்குமதிக்கு கிர்கிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக கிர்கிஸ்தான் உணவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நீபா வைரஸ் பரவல் உள்ளது.
இந்த நீபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மக்களுக்குத் தொற்றும் அபாயம் உள்ளது.
இந்த நீபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மக்களுக்குத் தொற்றும் அபாயம் உள்ளது.
இதனால் வர்த்தகம் மற்றும் பயண விடயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னெச்சரிக்கையாக இந்தியாவிலிருந்து வரும் இறைச்சி உட்பட விலங்குகளிலிருந்து கிடைக்கும் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது இந்தியாவில் நீபா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாகவும், அதனைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் இந்திய மத்திய அரசு தெரிவித்திருந்துள்ளது.





