இந்தியா

இது தேர்தல் அல்ல… ஜனநாயகப் போர்!” – மாமல்லபுரத்தில் கர்ஜித்த விஜய்!

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல, அது ஒரு ‘ஜனநாயகப் போர்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

 

தனது தொண்டர்களே அந்தப் போரை முன்னின்று நடத்தும் ‘கமாண்டோக்கள்’ என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற அந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், சுமார் 3,000 மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மத்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

“அண்ணா” என்ற பெயரைக் கட்சியில் வைத்திருப்பவர்களே அண்ணாவை (சி.என். அண்ணாதுரை) மறந்துவிட்டதாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வை அவர் சாடியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தி.மு.க-வைத் ‘தீய சக்தி’ என்றும், அ.தி.மு.க-வை ‘ஊழல் சக்தி’ என்றும் குறிப்பிட்ட அவர், இந்த இரு சக்திகளையும் எதிர்க்கும் துணிச்சல் த.வெ.க-வுக்கு மட்டுமே இருப்பதாக விஜய் கூறினார்.

 

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்ட பிரசாரப் பயணத்தைத் த.வெ.க தொடங்கவுள்ளது.

 

கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை

இது தொடர்பாக விஜய் மட்டுமே இறுதி முடிவெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button