
நாட்டிற்கு வருகைதந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஹி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் விடுதியில் இவர்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றதாக வெளிவிவகார அமைச்சரின் ஊடகப் பிரிவு, எமது செய்தி சேவைக்கு தெரிவித்தது.
இந்த நிலையில் குறுகியகால விஜயமாக நாட்டிற்கு வருகைதந்தை சீன வெளிவிவகார அமைச்சர், மீண்டும் சீனா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
முன்னதாக, விசேட வானூர்தியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் சீன வெளிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்ததாக, கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது





