அரசியல்

கேப்பாப்புலவு காணி விவகாரம் : இராணுவம் பொய்யுரைப்பதாக ஜனாதிபதியிடம் ரவிகரன் எம்.பி தெரிவிப்பு

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரத்தில் இலங்கை இராணுவம் பொய்யுரைத்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

 

கேப்பாப்புலவு பகுதியில் 159.5 ஏக்கர் காணியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் போதே, நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியிடம் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்தநிலையில், கேப்பாப்புலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button