தமிழீழம்

மட்டு. நகரில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்

மட்டக்களப்பு நகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் பதில் வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களை போன்று மட்டக்களப்பு மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள், களியாட்ட நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தமது தரப்பு கருத்துகளை முன்வைத்தார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவை கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களை தவிர்த்ததாக அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட ஆயரின் வேண்டுகோளுக்கு அமைய கொண்டாட்டங்களை தவிர்த்ததாக மாநகர சபை முதல்வர் கூறினார்.
மத ரீதியான மற்றும் அரசியல் ரீதியான முரண்பாடுகளை அடிப்படையாக கொண்டு தாம் கொண்டாட்டங்களை நிறுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button