இலங்கை

வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – சுமந்திரன் வாதம் – ஐவருக்கும் பிணை !

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட நால்வர் இன்று (25) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.
தொல்பொருள் பதாகையை வாழைச்சேனை தவிசாளர் உட்பட நான்கு பேர் அகற்றியது சம்பந்தமான வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களும் அவருடன் சட்டத்தரணி விஜயகுமார் அவர்களும் பிரசன்னமாகி பிணையினை பெற்றுத்தர வழிசெய்தனர்.
உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் அதிகாரங்களை மீறி மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் அனுமதி இன்றி எவ்விதமான பெயர் பலகையும் காட்சிப்படுத்த முடியாது இது இன்றைய தினம் கனம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 22ஆம் திகதி கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் “தொல்பொருள் இடம்” என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டிருந்தன.
எனினும், பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வீதிகளில் இப் பலகைகள் வைக்கப்பட்டதாகக் கூறி, பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவின் பேரில் அவை அகற்றப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அகற்றப்பட்ட பெயர்ப் பலகைகளை பொலிஸார் மீட்டதுடன், ஒருவரை கைது செய்திருந்தனர்.
தொல்லியல் துறையாக இருப்பினும் உள்ளூராட்சி அனுமதி பெற வேண்டும் எனும் வாதத்தினை எதிர்வாதிட முடியாமல் பொலிசார் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளான 369,410மற்றும் 417 ஆகியவற்றில் B அறிக்கை தாக்கல் செய்து இருந்தனர்.அது முழுமையாக வழக்கு அறிக்கை தவறு எனவும் சட்டபூர்வமான கடமையை பிரதிவாதி நிறைவேற்றுவதற்காவே செயல்பட்டனர் எனவும் சமர்ப்பணம் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களும் சிரேஷ்ட சட்டத்தரணி விஜயகுமார் செபாஸ்டியன், சட்டத்தரணி அ.நிதான்சன்,சட்டத்தரணி சுஜா கந்தசாமி,சட்டத்தரணி மயூரி தர்மதாஸ்,சட்டத்தரணி ரிவான் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது
தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட மேலும் நால்வரைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button