இலங்கை

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை நிகழ்வு.!

ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு இன்றையதினம் நாகர்கோவில் குருகுலம் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இவ் குருதி நன்கொடை நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் செய்யப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் குருதித் தான நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், ஜனநாயக போராளிகள் கட்சி பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி, ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், ஐனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் குருதி நன்கொடை நிகழ்வில் பங்குகொண்ட குருதி நன்கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button