
ஆனால் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி, மயக்கம் அடைய செய்துவிட்டு, கடத்தி சென்றனர். அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை விமான நிலைய பகுதியில் கல்லுாரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





