உலகம்

அன்றூவின் அனைத்து பட்டங்களையும் நீக்கி, இல்லத்திலிருந்து வெளியேற்றிய மன்னர் சார்ல்ஸ்

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ், அன்றூவிடமிருந்து இளவரசர் என்ற பட்டத்தை நீக்கி விண்ட்சரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

65 வயதான அன்றூ, மறைந்த ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும், மன்னர் சார்ல்ஸின் சகோதரரும் ஆவார்.

அவர், குற்றம் சாட்டப்பட்ட பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்தநிலையில் இளவரசர் அன்றூ, தான் வகித்து வந்த “யோர்க் கோமகன்” (Duke of York) உள்ளிட்ட தனது அனைத்துப் பட்டங்களையும் இம்மாதம் துறப்பதாக அறிவித்தார்.

தற்போது மன்னர் சார்ல்ஸ் தனது நடவடிக்கையை மேலும் கடுமையாக்கி, அன்றூவின் அனைத்து பட்டங்களையும் நீக்கி விட்டார்.

புற்றுநோய் சிகிச்சையை தொடர்ந்து பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, சமகால பிரித்தானிய அரச குடும்ப வரலாற்றில் மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button