இந்தியா

கரூர் சனநெரிசல் துயரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தலைவர் அளித்த உறுதி

கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் தவெக தலைவர் அறிவித்திருந்தார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

பின்னர் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்தார்.

தவெக தலைவர் கரூர் செல்வதற்கு அனுமதியும் இடமும் வழங்கப்படாததின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களைச் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.

இதனையடுத்து இன்று சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்தநிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாகச் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறியதாக  செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை கரூர் சனநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் மருத்துவ, கல்வி செலவுகளை ஏற்பதாகவும் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் தவெக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button