
தமிழக கடற்றொழிலாளர்கள் 47 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிப்பதாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக
செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே நாளில் அதிக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் 47 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களின் 05 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.





