
இந்தியா எப்போதும் யுக்ரைனின் பக்கம் இருப்பதாக, யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்றவை மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதன் மூலம், இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், யுக்ரைனில் நடந்து வரும் போருக்கு இந்தியா மற்றும் சீனா நிதியளிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, இந்தியா எப்போதும் யுக்ரைனின் பக்கம் இருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா விரும்புவதாக தான் நினைக்கவில்லை.
அத்துடன், ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதியின் அணுகுமுறையை மாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பியர்கள் இந்தியர்களுடன் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.
ரஷ்ய எரிசக்தித்துறை குறித்த தனது அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ளும் என்றும், சீனாவிடம் இருந்து இதே போன்ற நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.





