இந்தியா

இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் யார்

இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக  இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், 1957 ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருப்பூரில் பிறந்தார்.

இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ. முடித்துள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

கோவையில் பா.ஜ.க. வலுவாகக் காலூன்றியபோது முக்கிய முகமாக இருந்தார்.

2004 முதல் 2006 வரை தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தார்.

அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

பா.ஜ.க. தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட உள்ள மூன்றாவது தமிழர் இவர் ஆவார்.

தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button