
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை மையமாகக் கொண்டுள்ள, அண்மையில் வெளியான The Hunt: The Rajiv Gandhi Assassination Case என்ற ஹிந்தி மொழியிலான வலைத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
1991 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு கேரளாவுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், இந்தத் தொடரில் கேரளாவில் பிறந்த நடிகர்களான கௌரி பத்மகுமார் மற்றும் ஸ்ருதி விஜயன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர்களாக நடித்துள்ளனர்.
அதன்படி,ஸ்ருதி விஜயன், கொலையை நடத்திய தற்கொலை குண்டுதாரியான தனுவாகவும், கௌரி பத்மகுமார் கொலைக்கு உதவியதாக கூறப்படும் சுபாவாகவும் நடித்துள்ளனர்.
அவர்களுடன் மலையாள நடிகர்களான ஜோதிஷ் எம்ஜி, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகவும், ஷஃபீக் முஸ்தபா கொலையின் மூளையாக இருந்ததாக கூறப்படும் சிவராசன், அகில் கைமல் சாந்தனாகவும் விஷ்ணு ஜி வாரியர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் ஹரிபாபுவாகவும் நடித்துள்ளனர்.
ஊடகவியலாளர் அனிருத்ய மித்ராவின் ‘Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடரில், ராஜீவ் காந்தி படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து நடந்த 90 நாள் விசாரணைகளும் படமாக்கப்பட்டுள்ளன.





