இந்தியா

விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது – இந்திய பிரதமர்

விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி, விவசாயிகள் நலனே இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது.
ஆகவே, விவசாய பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் அமெரிக்காவினால் கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விவசாயிகள் நலனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.
நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்குத் தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button