இலங்கை

செம்மணி மனித புதைகுழி தொடர்பில், சர்வதேச மனித உரிமை சட்டங்களும்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு .

அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.

பிரிட்டன் மனித புதைகுழிதொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன்.

இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன்

அதனை வாசித்துக்கொண்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.. சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து நமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும்.

 

நாடாளுமன்றம் திரும்பியதும் நான் அவரைத் தொடர்புகொள்வேன்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button