சுவிஸ்

சுவிஸ் செய்தித்தளம் Swissinfo-வில் வெட்டு: பேர்னில் ஆர்ப்பாட்டம்

வெளிநாடுகளுக்கான சுவிஸ் செய்தித்தளம் Swissinfo மற்றும் tvsvizzera.it மீதான நிதி வெட்டை எதிர்த்து, செவ்வாய்க்கிழமை பேர்ன் (Bern) நகரில் சுமார் 50 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த வெட்டுகளை சுவிஸ் மத்திய அரசு (Federal Council) கடந்த வாரம் அறிவித்தது. சுவிஸ் அரசு நிதி கொடுக்கும் பொது ஒளிபரப்பு நிறுவனம் SSR. 2027 முதல் 2030 வரையிலான ஒப்பந்தத்தில் Swissinfo-வின் ஆண்டு பட்ஜெட் கிட்டத்தட்ட பாதியாகக் குறைகிறது.

இதனால் ஜப்பானிய மொழி, போர்த்துகீசிய மொழிச் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இத்தாலிய மொழியில் இயங்கும் tvsvizzera.it முழுவதுமாக மூடப்படுகிறது. வெளிநாட்டுச் சேவைகளில் மொத்தம் 22 முழுநேர வேலைகளை SSR நீக்குகிறது. இவற்றில் பெரும்பாலானவை Swissinfo-வில்தான். மற்றவை 3sat, TV5 Monde, tvsvizzera.it ஆகியவற்றில்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வேலை நீக்கங்களை ரத்து செய்யக் கோருகிறார்கள். வெளிநாட்டினருக்கு சுவிட்சர்லாந்தைப் பற்றி விளக்க இந்த இரண்டு ஊடகங்களும் மிகவும் அவசியம் என்பது அவர்கள் வாதம்.

Swissinfo-வில் வேலை செய்யும் இரண்டு ஜப்பானிய பத்திரிகையாளர்களும் பேசினர். தங்கள் வேலை பல ஜப்பானியர்களுக்கு மிகவும் தேவையானது என்றனர். இது நின்றால் சுவிஸ்–ஜப்பான் இடையிலான புரிதலும் நட்பும் குறையும் என்றும் சொன்னார்கள்.


மூலம்: RSI
புகைப்படம்: Koshu / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button