பாசல்-லாண்ட் மாநிலத்தில் (Basel-Land) உள்ள லீஸ்டல் (Liestal) நகரில் சுமார் 1000 லிட்டர் உப்பு அமிலம் (Salzsäure) கசிந்துள்ளது. ஒரிஸ்டால் (Oristal) தொழிற்பேட்டைப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.
அமிலம் கசிந்ததால் அங்கே புகை மேகம் உருவாகியுள்ளது. பாதுகாப்புப் படையினர் அந்தப் புகை பரவாமல் தடுக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்று போலீஸ் கூறியது.
இதுவரை யாருக்கும் காயம் இல்லை.
சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்க வேண்டும் என்று போலீஸ் கேட்டுள்ளது. காற்றோட்ட வசதி (Lüftung), ஏர் கண்டிஷன் இருந்தால் அவற்றை நிறுத்திவிடவும் சொல்லியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிக்குப் போவதையும் தவிர்க்க வேண்டும்.
மூலம்: SRF
புகைப்படம்: Matt C / Unsplash





