சுவிஸ்

தெசினில் மலை கேபிள் கார்களில் இந்தக் கோடை கூட்டம் கூடவில்லை

தெசின் மாநிலத்தில் (Ticino) இந்தக் கோடையில் மலைக்கு ஏற்றிச் செல்லும் கேபிள் கார், லிஃப்ட்களில் பயணிகள் எண்ணிக்கை கூடவில்லை. கடந்த ஆண்டு வந்த அதே அளவுதான் வந்தனர்.

சுவிஸ் முழுவதும் பார்த்தால், மற்ற பகுதிகளில் சராசரியாக சுமார் 8 சதவீதம் அதிகமாக வந்தனர். தெசினில் அப்படி நடக்கவில்லை. காரணம், அங்கே கோடையில் ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகள் அதிகம். சுற்றுலா வியாபாரத்தில் 10-ல் 8 பங்கு கோடை மாதங்களில்தான் நடக்கிறது. இந்த ஆண்டு கடுமையாக அடித்த வெயிலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தெசின் பொதுப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் சங்கத்தின் துணைத் தலைவர் லூகா யார்டினி (Luca Jardini), இது நல்ல செய்திதான் என்கிறார். கடந்த ஆண்டின் கூட்டத்தைத் தக்கவைத்தது முக்கியம் என்பது அவர் கருத்து. வானிலை மெல்ல மாறி வருகிறது. குளிர்காலத்தில் பனி குறைவாக இருக்கிறது. அதனால் குளிர்காலத்தில் மட்டும் ஓடும் லிஃப்ட்களுக்கு சிக்கல். ஆண்டு முழுவதும் ஓடும் வகையில் மாற வேண்டும் என்கிறார். தமாரோ (Tamaro) ஏற்கெனவே அப்படி மாறிவிட்டது. கார்டாடா (Cardada) இப்போது மாறி வருகிறது.

உணவகங்களும் தங்கும் வசதிகளும் இதற்குக் கைகொடுக்கும் என்றும் அவர் சொல்கிறார். பள்ளிகளின் பசுமை வாரங்கள், மற்ற மாநிலங்களிலிருந்து வந்து நடைப்பயணம் செல்பவர்கள் ஆகியோரும் இதில் முக்கியம்.


மூலம்: RSI
புகைப்படம்: Muhammad Irfan / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button