சுவிஸ் ஸ்கீ சம்மேளனத்தின் (Swiss-Ski) முன்னாள் துணைத் தலைவர் கிளோட்-அலேன் ஷ்மிட்ஹால்டர் (Claude-Alain Schmidhalter), வாலே மாநிலத்தில் உள்ள ப்ரிக் (Brig) நகர நீதிமன்றத்தில் மோசடி வழக்கை எதிர்கொள்கிறார். இன்று பிற்பகல் தீர்ப்பு வரவிருக்கிறது.
பிப்ரவரியில் கிரான்-மோன்டானாவில் (Crans-Montana) நடக்கவிருக்கும் உலக ஸ்கீ போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகவும் அவர் இருந்தார். இப்போது இரண்டு பதவிகளிலும் அவர் இல்லை.
அவருடைய பொறியியல் நிறுவனத்தின் இன்னொரு உரிமையாளரை ஏமாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டு. நிறுவனத்தின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டினார் என்கிறார்கள். பல இலட்சம் பிராங்க் பணத்தை, தான் கட்டுப்படுத்திய வேறு நிறுவனத்துக்கு மாற்றினார் என்றும் அரசு தரப்பு சொல்கிறது. அவருக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கேட்கிறார்கள். ஆனால் உடனே சிறைக்கு அனுப்பாமல், நிபந்தனையுடன். அவருடைய வழக்கறிஞர்கள் விடுதலை கேட்கிறார்கள்.
நீதிமன்றத்தில் ஷ்மிட்ஹால்டர் Swiss-Ski மீது கடுமையாகக் குற்றம் சாட்டினார். தன்னை வேண்டுமென்றே பதவியிலிருந்து ஒதுக்கினார்கள் என்றார். Swiss-Ski அதை மறுக்கிறது. அவர் தானாகவே விலகினார் என்றும், இந்த வழக்கு பற்றி அக்டோபர் தொடக்கம் வரை தங்களுக்குத் தெரியாது என்றும் சொல்கிறது.
இந்த வழக்கு 2019-இலேயே தொடங்கிவிட்டது. தீர்ப்பு எப்படி வந்தாலும், விளையாட்டு அமைப்புகளில் அவர் மீண்டும் பொறுப்புக்கு வருவது கடினம் என்றே தெரிகிறது.
மூலம்: SRF
புகைப்படம்: Sasun Bughdaryan / Unsplash





