சுவிஸ்

மிக்ரோஸில் விற்ற அல்னாதுரா விதைக் கலவை திரும்பப் பெறப்படுகிறது – சால்மொனெல்லா அபாயம்

சுவிஸ் முழுவதும் மிக்ரோஸ் (Migros) கடைகளில் விற்ற அல்னாதுரா (Alnatura) சாலட் விதைக் கலவையை சாப்பிட வேண்டாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை இந்த அறிவிப்பு வந்தது.

இது பயோ சாலட் விதைக் கலவை. இதில் சால்மொனெல்லா என்ற கிருமி இருக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக மிக்ரோஸ் இதைத் திரும்பப் பெறுகிறது.

இந்தக் கிருமி வயிற்றைப் பாதிக்கும். சாப்பிட்ட பிறகு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி வரலாம். இப்படி ஏதாவது அறிகுறி இருந்தால் டாக்டரைப் பார்க்கும்படி மிக்ரோஸ் சொல்கிறது.

எல்லா பாக்கெட்டுகளும் பாதிக்கப்படவில்லை. பாக்கெட்டில் உள்ள காலாவதி தேதி 2027 ஜூன் 3 முதல் ஜூலை 13 வரை இருந்தால் மட்டும் அது திரும்பப் பெறப்படும் பொருள். இதன் விலை 2.50 பிராங்க். எல்லா மிக்ரோஸ் கடைகளிலும், ஆன்லைனிலும் விற்றது. இப்போது விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

கடையில் வாங்கியவர்கள் பாக்கெட்டை திருப்பிக் கொண்டு போனால் பணம் திரும்பக் கிடைக்கும். ஆன்லைனில் வாங்கியவர்களை மிக்ரோஸ் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button