தமிழீழம்

தாயை தேடிச் சென்று தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்த குழந்தை பலி!

மட்டக்களப்பு – தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் இருந்த நீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளது.

 

அக்விவ் விகான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

 

குழந்தையின் தாய் குளியலறையில் துணிகளைத் துவைத்து, வாசற்படியில் காயவைத்துக்கொண்டிருந்தபோது, தூங்கிக்கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றதை தாய் கண்டுள்ளார்.

 

அவ்வேளையில், குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக வேறு உடைகளை எடுப்பதற்காகத் தாய் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

 

அந்நேரத்தில், குளியலறையில் துணி துவைத்த பிறகு எஞ்சியிருந்த நீர் நிரம்பிய வாளிக்குள் குழந்தை விழுந்துள்ளது.

 

தாய் அங்கு வந்து பார்த்தபோது, குழந்தை வாளிக்குள் தலைகீழாக விழுந்து, மூச்சுவிட முடியாத நிலையில் இருந்ததாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

பிரேதப் பரிசோதனையின் பின்னர் குழந்தையின் சடலம் இறுதிச் சடங்குகளுக்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button