இலங்கை

இலங்கை சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு அமைப்பு

சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் முறைமைகள் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகள் மற்றும் விதிமுறைகளைச் சமர்ப்பிப்பதற்காகக் குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த விவகாரங்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் இக்குழு நியமிக்கப்படும் என்றும், இரண்டு வாரங்களுக்குள் இது குறித்து ஆராய்ந்து திருத்தங்களைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இதில் மகா சங்கத்தினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகள் குறித்து மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு இன்றி சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போது, தனிப்பட்ட நபர்களுக்காகத் தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தான் தயாராக இல்லை என்றும், சட்டம் தற்போதைய காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை எனில், சரியான முறையில் சட்டத்தை இயற்றிக் கொள்வதே செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button