
தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நல்லூரில் ஆவண கண்காட்சி இன்றைய தினம் திங்கட்கிழமை தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத்தூபிக்கு முன்பாக உள்ள பகுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நான்காவது வருடமாக இடம்பெறும் இவ் ஆவண கண்காட்சி எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக 12 நாட்கள் நீராகாரம் இன்றி தன்னுடைய உயிரினை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனுடைய 39ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகமெங்கும் எழுச்சிப்பூர்வமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதனொரு அங்கமாக ஆவண கண்காட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனுடைய வரலாற்றினையும், தியாகங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து இயம்புகின்ற வகையில் இந்த வரலாற்றுக் கண்காட்சியினை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்






