
‘
நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தின் இலங்கைத் தொடர்பு மற்றும் யாழ்ப்பாணத்துடனான உறவு குறித்து பேசியுள்ளார்.
ஒரு நேர்காணலின்போது பேசிய ஜேசன், தனது தாயார் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், அங்கு பிறந்து வளர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
எனது அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் வடக்கு இலங்கையைச் சேர்ந்தவர். அங்கே பிறந்து வளர்ந்தார். பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்,” என்று ஜேசன் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரது குடும்பம் வெளிநாட்டில் குடியேறியதாகவும் அவர் கூறினார்.இலங்கைக்கு வரும்போது, தனது தாத்தாவுக்குச் சொந்தமான ஒரு சொத்து தங்களது குடும்பத்தின் கடந்த காலத்துடனான முக்கியமான தொடர்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தனது ‘Sigma’ திரைப்படத் திட்டத்திற்கான படப்பிடிப்பு இடமாக இலங்கையையும் பரிசீலித்ததாக ஜேசன் தெரிவித்தார். இதற்காக திரைப்படக் குழுவினர் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தாலும், இறுதியில் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதுடன், இலங்கையின் இயற்கை அழகை தனது படைப்பின் மூலம் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.





