சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் பரவும் புதிய வைரஸ் தொற்று! 28 பேர் பாதிப்பு – குளிரூட்டியதால் வந்த ஆபத்து

சுவிட்சர்லாந்தின் பாசல்-சிட்டி (Basel-City) மாகாணத்தில் லெஜியோனெல்லா (Legionella pneumophila) பாக்டீரியா தொற்றுடன் தொடர்புடைய மேலும் இரண்டு புதிய நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பாசல்-சிட்டி சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், அண்மைய தொற்றுப் பரவலுடன் தொடர்புடைய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 6 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தத் தொற்றின் சாத்தியமான மூலமாக, க்லைன்பாசலில் (Kleinbasel) அமைந்துள்ள Manor நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடத்தின் கூரையில் உள்ள இரண்டு குளிரூட்டும் கோபுரங்கள் (Cooling Towers) அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த குளிரூட்டும் கோபுரங்கள் தற்போது சேவையிலிருந்து அகற்றப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து, சுவிஸ் காற்று மற்றும் நீர் சுகாதார சங்கம் (Swiss Association for Air and Water Hygiene), ஆவியாதல் குளிரூட்டும் அமைப்புகளை (Evaporative Cooling Systems) இயக்கும் நிறுவனங்கள், அவை பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சரியான வடிவமைப்பு மற்றும் முறையான பராமரிப்புடன் இயங்கும் குளிரூட்டும் அமைப்புகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்றும், ஆனால் பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, தகுதியான பணியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப தரநிலைகளின்படி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button