இலங்கைதமிழீழம்தமிழ்

அடுக்கடுக்காக சிறுவர்களின் எலும்புக்கூடுகள் செம்மணி மனித புதைகுழியில் மீட்பு

யாழ்ப்பாணம் அரியாலை, செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button