
வலி. வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
குறித்த பகுதியில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர பொலிசார் அனுமதிக்காத நிலையில் குறித்த மக்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் தமது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்








