
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 37 ஆம் நாள் அகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
அதில் 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 2ஆம் கட்ட அகழ்வின் போதும் இதேபோன்று கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
ஒரே புதைகுழியில் இதுபோன்ற அரிய புதைப்பு முறை இரண்டாவது முறையாக பதிவாகியுள்ளது.





