
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 35 ஆம் நாள் அகழ்வு இன்று யாழ் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது 11 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இன்றைய தினம் 7 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 423 எலும்புக்கூடுகள் அகழ்ந்தொடுக்கப்பட்டுள்ளன.
இன்று சேதமடைந்த மோதிர துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டு பிறபொருள் சான்றுப்பொருளாக நீதிமன்ற கட்டுக்காவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.








