இலங்கை

வரலாற்றுச் சாதனை! கிழக்கு மாகாண சாம்பியனாக மட்/களுதாவளை ம.வி தேசிய பாடசாலை மகுடம்!!

 

மட்/களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் கூடைப்பந்தாட்ட அணி மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளரைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட பாராட்டு விழா இன்று (17) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், கிழக்கு மாகாணத்தின் அசைக்க முடியாத பலம்பொருந்திய அணியாகக் கருதப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை அதிரடியாக வீழ்த்தி, களுதாவளை மகா வித்தியாலய அணி முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தேசிய மட்டப் போட்டிகளுக்கும் இவ்வணி தகுதி பெற்றுள்ளது.

அதேவேளை, 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும் இப்பாடசாலை கூடைப்பந்தாட்ட அணியினர் மூன்றாம் இடத்தைப் பிடித்து தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணமான சாம்பியன் வீரர்களையும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து வழிநடத்திய அர்ப்பணிப்புமிக்க பயிற்றுவிப்பாளர் திரு. சி. விஜிதரன் அவர்களையும் பாராட்டி, பழைய மாணவர் சங்கத்தினால் இந்தச் சிறப்புக் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாதித்த மாணவர்களுக்கும், பயிற்சியாளருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! தொடர்ந்து தேசிய மட்டத்திலும் எமது பாடசாலையின் நாமம் ஒலிக்கட்டும்!

தகவல்: பழைய மாணவர் சங்கம், மட்/களுதாவளை ம.வி தேசிய பாடசாலை.

#BasketballChampions #Batticaloa #HistoryCreated #Eastern_Province #OldBoysAssociation #Record_Breaking #SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button