
மட்டக்களப்பு மாநகரத்தின் தனித்துவமான வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமூக மரபுகளைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபை புதியதொரு வரலாற்றுப் படியை எடுத்து வைத்துள்ளது.
மாநகர சபையினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்காக (Museum), வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலப் பொருட்களைப் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் பொருட்கள்:
பொதுமக்கள் வழங்கும் பொருட்கள் மட்டக்களப்பு மாநகரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பின்வரும் பொருட்கள் வரவேற்கப்படுகின்றன:
• பழமையான ஆவணங்கள் மற்றும் நூல்கள்
• வரலாற்றுப் புகைப்படங்கள்
• பழங்காலக் கருவிகள் மற்றும் நாணயங்கள்
• பாரம்பரிய கைவினைப் பொருட்கள்
• பழங்காலப் பயன்பாட்டுப் பொருட்கள் (விளக்குகள், பெட்டகங்கள் போன்றவை)
• மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இதர பொருட்கள்.
பொருட்களை ஒப்படைக்க வேண்டிய இடம்:
• மட்டக்களப்பு மாநகர சபை அலுவலகம்
மேலதிக தொடர்புகளுக்கு:
இவ்வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள அல்லது பொருட்களை ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்க பின்வரும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்:
• மாநகர முதல்வர்: 0704271345
• மாநகர ஆணையாளர்: 0779993244
• மாநகர சபை உத்தியோகத்தர்: 0766693667
“மட்டக்களப்பின் வரலாற்றைப் பாதுகாப்போம்… எதிர்கால சந்ததியினருக்காக மண்ணின் பாரம்பரியத்தை ஒன்றிணைந்து நிலைநிறுத்துவோம்” எனும் மாநகர சபையின் இந்த உன்னத முயற்சிக்கு உங்களது பங்களிப்பை வழங்கி மட்டக்களப்பின் மாண்பை உலகறியச் செய்ய உதவுமாறு வேண்டுகின்றனர்.
தகவல்: மட்டக்களப்பு மாநகர சபை
#Batticaloa #BatticaloaMC #BattiHistory #SaveBattiHeritage #BatticaloaMuseum #SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #மட்டக்களப்பு #பாரம்பரியம் #மட்டக்களப்புமாநகரசபை #விடுதலைFM





