உலகம்

வெனிசுலா பேரிடர்- உதவிக்கரம் நீட்டிய கால்பந்து நட்சத்திரம்

வெனிசுலாவில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து நட்சத்திர வீரரான நெய்மர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவ மற்றும் அவசரகால நிவாரணப் பணிகளுக்காக 2.5 இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

 

 

 

மேலும்,பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ள நெய்மர்,இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு தவிக்கும் குடும்பங்களுக்கு, என்னுடைய இந்தச் சிறிய பங்களிப்பு மன வலிமையையும் ஆறுதலையும் அளிக்கும் என தாம் நம்புவதாக கூறியுள்ளார்.

 

 

 

இவரது இந்த தாராள மனப்பான்மைக்கும் மனிதநேயமிக்க செயலுக்கும் உலகெங்கிலும் உள்ள அவரது இரசிகர்களும், பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

அத்துடன்,பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால உதவிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

 

 

இக்கட்டான இந்தச் சூழ்நிலையில், வெனிசுலா நாட்டிற்குப் பல்வேறு உலக நாடுகளும், தனியார் அமைப்புகளும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button