
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக, கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் மாணவர் விடுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகம் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





