
காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் காரணமாக, மாகாணத்துக்கான பெருமளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் செயற்திட்டத்தின் முன்னேற்றங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.
மேலு இதன் பின்னடைவுகளுக்கான காரணங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன், தொடர்புடைய அதிகாரிகளிடம் உரிய விளக்கங்களும் கோரப்பட்டன. தொடர்ந்து பின்னடைவைக் காண்பிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யோசனையையும் மாகாண காணி ஆணையாளர் இதன்போது முன்வைத்தார்
அத்துடன்,எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டத்தை மிகத் துரிதமாக முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், பிரதேச செயலாளர்கள் ஒவ்வொரு வாரமும், மாவட்டச் செயலாளர் மாதாந்தமும் இதன் முன்னேற்றங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என உறுதியான அறிவுறுத்தலை வழங்கினார்.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





