உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

 

 

ஜி7 (G7) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனுடன் வெர்சாய் அரண்மனையில் நடைபெற்ற இரவு விருந்தின்போது, டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தில் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டுள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. (AFP) செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் (e-signature) அதிகாரப்பூர்வமாகப் கையெழுத்திடப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

 

 

 

நீண்டகாலமாக பதற்றமான உறவைக் கொண்டிருந்த அமெரிக்காவும் ஈரானும், தற்போது இத்தகைய அமைதி முயற்சியில் இறங்கியிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரவும், ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button