உலகம்

பிரேசில் ஹெலிக்கொப்டர் விபத்து – அறுவர் உயிரிழப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மேற்குப் பகுதியில் இரு ஹெலிக்கொப்டர்கள் நடுவானில் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

உயிரிழந்தவர்கள் இரு ஹெலிக்கொப்டர்களின் பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

 

 

 

மோதலுக்குப் பின்னர் ஏற்பட்ட தீ விபத்தில், விமானங்கள் ஒரு மின்சார கார் விற்பனையகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்துள்ளன.

 

 

 

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மின்சார கார்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் குறித்து பிரேசில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button