
நோர்வே இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஹோய்பி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல், காணொளி வாயிலாக வழக்கு அமர்வில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





