
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தனுஷ்கோடி தரைப்பாலம், 62 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
மண் அரிப்பு காரணமாக முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி தற்போது தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயல் தனுஷ்கோடி நகரை பெரிதும் பாதித்ததுடன், அப்பகுதியில் இருந்த பல கட்டமைப்புகள் கடலில் மூழ்கியிருந்தன.
இந்நிலையில், பல தசாப்தங்களாக கடலுக்குள் புதைந்திருந்த தரைப்பாலம் மீண்டும் வெளிப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையேஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





