இந்தியா

தங்கம் வாங்குவதையும் வெளிநாட்டுப் பயணங்களையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து, மின்சார வாகனங்கள் மற்றும் வாகனப் பகிர்வு முறைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நிறுவனங்கள் சாத்தியமான இடங்களில் மீண்டும் ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’முறையை ஊக்குவிக்க வேண்டும்.

 

தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் திருமணங்கள் மற்றும் தேவையற்ற தங்க முதலீடுகளைத் தவிர்ப்பதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்

.விவசாயிகள் இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50% வரை குறைத்து, இயற்கை விவசாயத்தை நோக்கி நகர வேண்டும்.

 

வளைகுடா பகுதி மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் நிலையற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் மசகு எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்திய பிரதமர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button