இலங்கை

சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம்: அனைத்து மாவட்டங்களுக்கும் ‘சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகள்’ நியமனம்!

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில், அனைத்து மாவட்டங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக’ நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் சுகாதார நிறுவனங்களுக்கு இடையே நிலவும் ஒருங்கிணைப்பு குறைபாடுகளை நீக்கி, வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

 

மாவட்ட மட்டத்திலான சுகாதாரத் தேவைகளை மக்கள் பங்களிப்புடன் கண்டறிதல்.அந்தத் தேவைகளை தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் இணைத்தல்.

 

புதிய சுகாதாரத் திட்டங்களை அடையாளம் கண்டு அமைச்சுக்குப் பரிந்துரைத்தல்.நடைமுறையிலுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய உதவுதல்.

 

இந்த புதிய பொறிமுறையூடாக நாட்டின் சுகாதார சேவையின் தரத்தை உயர்த்தி, மக்களுக்கு நம்பிக்கையான சேவையை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button