இந்தியா

முதல்வர் அலுவலகத்தில் முதல் கையெழுத்து : எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு கோப்பில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட பதவியேற்பு விழாவில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், முக்கியமான மூன்று கோப்புகளிலும் கையெழுத்திட்டார்

.பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்டு தலைமைச் செயலகத்தை நோக்கி முதலமைச்சர் விஜய் பயணித்தார்.

 

தலைமைச் செயலகத்தை அடைந்த அவருக்கு காவல்துறையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அலுவலகத்தில் தனது பதவியைப் பொறுப்பேற்ற விஜய், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

 

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொண்ட முதல் நிர்வாக நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button