
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் மக்களுக்கிடையிலான ஆழமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், இரு பிராந்தியங்களும் பொருளாதார ரீதியில் இணைந்து செயற்படுவதன் மூலம் பாரிய நன்மைகளை அடைய முடியும்.
இந்தியா-இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மைக்குள் இணைந்து பணியாற்றுவதன் மூலம், பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்





