உலகம்

எண்ணெய்,எரிவாயு நெருக்கடி மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் என தகவல்

ஈரானுடனான போரால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், குறைந்தபட்சம் மேலும் ஆறு மாதங்களுக்குத் தொடரும் என நோர்வேயின் எரிசக்தி நிறுவனமான எக்வினோர் (Equinor) தெரிவித்துள்ளது.

தற்போது அமைதி திரும்பினாலும் கூட, நிலைமை வழமையான நிலைக்குத் திரும்புவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை ஆகும் என நாங்கள் கருதுகிறோம்” என்று நோர்வேயின் ஒளிபரப்பு நிறுவனமான NRK-க்கு அளித்த செவ்வியில் எக்வினோர் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

போரின் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்ததன் மூலம், நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர இலாபம் 18 சதவீதம் அதிகரித்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

 

வளைகுடாப் பகுதியில் பல கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய பல கப்பல்கள் உலகம் முழுவதும் சிதறிக்கிடப்பதால் அவற்றை வழமையான நிலைக்குக் கொண்டுவர நேரம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எவருக்கும் இந்த போரால் எந்த நன்மையும் இல்லை என்பதால், நிலைமை விரைவில் வழமைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button