
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி இன்று (05) உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்பூரில் வைத்து அவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘சுப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தலைவரான இவர், ‘புது வசந்தம்’, ‘நாட்டாமை’, ‘பூவே உனக்காக’, ‘ஆனந்தம்’, ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.





