
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், அரசியல் களத்தையும் அதிரடி சண்டை காட்சிகளையும் மையமாகக் கொண்டுள்ளதை ட்ரெய்லர் உறுதிப்படுத்தியது.
ஆனால், இந்த மகிழ்ச்சிக்கு இடையே ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
குறித்த ட்ரெய்லரில் ஒரு காட்சியில் கூகுளின் ஜெமினி (Google Gemini) AIஇன் சின்னம் (Logo) இடம்பெற்றிருப்பதை இரசிகர்கள் அவதானித்துள்ளனர்.
ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஒரு நபர் துப்பாக்கியை வைத்திருக்கும் காட்சியில், கூகுள் ஜெமினியின் சின்னம் (Logo) தெளிவாகத் தெரிவதாக இரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனையடுத்து படக்குழுவினர் உடனடியாக அந்த சின்னத்தை நீக்கிவிட்டு ட்ரெய்லரை அப்டேட் செய்திருந்தாலும், அதற்குள் நெட்டிசன்கள் அதைத் திரைப் பதிவு செய்து வைரலாக்கியுள்ளனர்.
சினிமாவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தவறில்லை என்றாலும், முறையாக எடிட் செய்யாமல் வெளியிட்டது சினிமா கலைக்கே அவமானம் என சிலர் கருத்து தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





