
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தமிழ்மக்களுடைய இலங்கையில் உள்ள பிரதான கட்சி என்ற ரீதியில் சாதனை படைத்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு அதன் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை தமிழ் நாட்டு மக்களோடும் தமிழ் நாட்டு அரசுடனும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் வேலை செய்வதற்கு நாம் காத்திருக்கின்றோம் என்ற செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





