இந்தியா

மே 7ஆம் திகதி தவெக தலைவர் விஜய் பதவியேற்பு: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழா!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், எதிர்வரும் மே 7ஆம் திகதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார்.

 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

அதே தினத்தில் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

 

இதையும் வாசிக்க..

 

ஆட்சிக்குத் தயாராகும் தவெக – தலைமைப் பொறுப்பில் விஜய் உறுதி

 

இதைத் தொடர்ந்து, சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

மே 7ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்கு, பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழாவுக்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button